top of page
Search

நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன்

"வயது கூடும் போது நோய்வரும்" என்று எந்த இயற்கையின் சட்டமும் கிடையாது.


உங்களைப் படைத்தது இறைவன் அல்லது இயற்கை, என்று எதை நீங்கள் நம்பினாலும், உங்களை முழுமையாகப் படைத்திருக்கிறார் / படைத்திருக்கிறது. உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும், நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படவே படைக்கப்பட்டிருக்கிறது.


ஆகவே எவனாவது, வயதானால் அந்த நோய் வரும், வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள். நம் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.


எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்துக் கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை.


மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன. மனிதர்கள் மட்டும்தான், வயதானால் நோய் வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.


நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்;

முதுமை என்று எதுவும் இல்லை,

நோய் என்று எதுவும் இல்லை,

இயலாமை என்று எதுவுமில்லை,


எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.


எனவே சிந்தனையை மாற்றுங்கள்.


ஆரோக்கியமாக வாழுங்கள்.

நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.


"மரணம்"

நம் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

நம் பிள்ளைகள் - பேரப் பிள்ளைகளை அழைத்து, "நான் இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன். போய் வருகிறேன், சந்தோஷமாக வாழுங்கள்!" என்று நம் குடும்பத்தினரிடம் விடைபெற்று, மகிழ்ச்சியாக நம் உடலைத் துறக்க வேண்டும்.

*யாருடைய மரணமும், மரணப் படுக்கையிலோ, மருத்துவ மனையிலோ நடக்கக் கூடாது.*


சிந்தனையை மாற்றுங்கள்:

நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்!

எல்லாத் தொந்தரவும் பறந்து போகும்!!


 
 
 

1 comentario


subiksha300499
21 jun 2019

Good one sir✨🎉

Me gusta
  • YouTube
  • anc
  • Instagram
  • unnamed

©2023 by B. E. Hemakumar

bottom of page